பகிர்ந்து வாழுங்கள் அன்பின் உலகம் பெரியது.





பகிர்ந்து வாழுங்கள் அன்பின் உலகம் பெரியது.

“முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்”(2 கொரிந்தியர் 9: 7). இன்றைய முதல் வாசகத்தின் இறைவார்த்தை மற்றும் “தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வக்குத் தம்மை உரியவராக்குவார்” என்ற தூய யோவான் 12: 25 நற்செய்தியின் அடிப்படையில் நாம் சிந்தித்து பார்ப்போம். 
கடந்த ஆண்டு எனது நண்பர் ஒரு கணொளியை அனுப்பியிருந்தார். அந்தக் காணொளி ஒரு ஐந்து வயது சிறுவனைப் பற்றியது. ஒரு நாள் தனது தாயிடம் உணவைப் பெற்றுக் கொண்டு, கடவுளை காணச் செல்கிறேன் என்று கூறி தணது பயணத்தை துவங்துகிறான். மாலையில் வீடு திரும்பிய மகணிடம் தாய் கேட்கின்றார், உனது பயணத்தில் கடவுளைக் கண்டாயா? கடவுள் பார்க்க எப்படி இருக்கிறார்? என்று கேள்விகளை முன்வைக்கின்றார். சிறுவன் பதில் கூறுகின்றான் இவ்வராக. கடவுளை காணவேண்டும் என்று செபித்து விட்டு பயணம் சென்றேன். கடவுளை வீதியிலும், தெருவோரங்களில் வாழும் பாட்டியிடத்திலும், எனது வயதையொடிட்டிய தெருவில் வாழும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளிடத்தில் கடவுளைக் கண்டேண். எனது உணவை மகிழ்வோடு பகிர்ந்த பொழுது அவர்கள் உதிர்த்த சிரிப்பில் கடவுள் அழகாய் இருக்கிறார் என்று கூறினான். ஆம் அச்சிறுவனின் அனுபவம் உண்மையானது. தேவையில் இருப்பவர்களை அறிந்து நம்மிடம் உள்ளதை பகிரும்போது நம்மில் கடவுள் வாழ்வார். 
எனக்கு பிடித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான எஸ். இரமகிரு~;ணன், தன்னுடைய கட்டுரையில் இவ்வராக குறிப்பிடுகிறார். மூன்று பண்புகள் ஒருவனிடத்தில் இருக்கும் பொழுது அவன் செல்வந்தனாக மாறுகிறான். அவை
1. பிறர்மீது காட்ட வேண்டிய அக்கரை
2. தன்னிடம் இருப்பதை பிறரோடு பகிர்வது
3. பிறர் வாழ்வுக்காக துணிந்து செயல்படுதல்
தன்னை சுற்றியுள்ள மனிதர்களின் மீதும் தன்மீதும் காட்ட வேண்டிய அக்கறையே ஒரு மனிதனின் முதல்பணி. இது உடல்நலம் சாந்தது மட்டுமல்ல. மனிதனின் சிந்தனை செயல்பாடு, சமூகமாற்றம் யாவற்றோடும் தொடர்பு உடையது. அக்கறையில்லாத மனிதன் அரை மனிதனே. பிறருடைய வாழ்வில் அக்கரையற்ற மனிதன் மிருகத்தைவிட கொடியவன். மக்களின் துயர் அறிந்து அவர்களது துயர் நீக்க உழைத்தல் வேண்டும். மக்களைச் சந்தித்து அவர்களுக்காக ஊழியம் செய்வதே உண்மையான அகப்புரட்சி. 
இரண்டாவது தன்னிடமிருப்பதை பங்குபோட்டுக் கொள்வது. உடனே பணத்தையா என்று தான் கேள்வி உருவாகிறது. பணமில்லை. பங்கு போட்டுக் கொள்வது என்பது பகிர்ந்து கொள்வது. தன்னிடமுள்ள நேரத்தை, திறமையை, ஆற்றலை, கற்பதை; திறனை, செல்வத்தை பகிர்வது. இந்தியாவின் செல்வங்கள் இங்குள்ள மனிதர்களின் ஆசையைப் போக்கி கொள்ள போதுமானது ஆனால் மனிதர்களின் பேராசையை போக இதனால் இயலாது என்று காந்தி குறிப்பிடுகிறார். அது தான் நிஜம். காரணமற்ற பேராசையும், அளவிற்கு மீறி சேர்த்து வைத்து முடக்கிக் கொள்ளும் அதிகார வேட்கையும் மாற வேண்டும். ஒரு மரம் தன்னிடமிருக்கும் கனினளைத் தர எவரிடமும் காசு கேட்பதில்லை. நிலத்திலிருந்து மனிதன் பெற்றுக் கொள்ளும் உணவிற்கு ஒரு நாளும் பூமி எதிர்ப்பு கொள்வதில்லை. அவை தன் வாழ்வை மனிதர்களோடு பகிர்ந்து கொள்கின்றன. அது போல தனது தேவைகளை வரையறை செய்து கொண்டுவிட்டு முடிந்தவற்றை பகிர்ந்து கொள்வது மிக முக்கியமானது.
மூன்றாவது துணிச்சல். நம்மை சிறு செயல்கூட செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி வைத்திருப்பது நமக்குள் உள்ள பயமே. தோல்வியைப் பற்றியே எப்போதும் சிந்திக்கின்றவர்களாக இருக்கிறோம். துணிச்சல் ஒன்றால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். எல்லா விடுதலைப் பயணங்களும் துணிச்சல் என்ற முதலடியில் இருந்தே துவங்குகின்றன. துணிச்சல் இல்லாத மனிதன் நடைபிணம் போன்றவன். துணிச்சல் மட்டுமே உலக புரட்சிகளுக்கௌ;ளாம் நீருற்று.
இந்த மூன்று பண்புகளையும் இன்று நாம் நினைவுகூறும் புனிதர் இலாரண்ஸ் அவர்களிடத்தில் நிறைவாக காணமுடியும். இன்றைய நற்செய்திக்கு மிகச்சிறந்த சான்றாக வாழ்ந்தார். கொடுங்கோலன் வலேரியன் ஆட்சியில் கிறிஸ்தவர்கள் பல்வேறு விதமான துயரங்களை சந்தித்தார்கள். திருச்சiயின் சொத்துக்களை தன்னிடம் ஒப்படடைக்க வேண்டும் என்று கட்டளையிட்ட நிலையில், மன்னின் கட்டளைக்கு இனங்காமல், திருச்சபையின் சொத்துக்களை ஏழைகள், கைவிடப்பட்டோர், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு நற்செய்தியின் வழியில் பகிர்ந்து கொடுத்தார். அரசன் சொத்துக்கள் எங்கே என்று கேட்ட பொழுது ஏழைகள், கைவிடப்பட்டோர், உடல் ஊனமுற்றோர் இவர்கள் தான் திருச்சபையின் சொத்துக்கள் என்று காண்பித்தார். சினமுற்ற அரசன் புனித லாரன்ஸ்க்கு கடுமையான தன்டனை வழங்கி அவரைக் கொன்றான். இறக்கும் வேளையில் கூட கடவுளை போற்றிப் புகழ்ந்தார். 
இன்றைய வாசகங்கள் மற்றும் புனிதரின் வாழ்வு கற்றுக்கொடுப்பது ஒன்றுதான் கடவுள் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் அன்பை நற்செயல்களால், பகிர்தலால் வெளிப்படுத்த வேண்டும். கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் அவரது கொடைகளை நிறைவாக வழங்கியிருக்கிறார். அந்த கொடைகளை, செல்வத்தை முகமலர்ச்சியோடு பகிர்வதுதான் இயற்கையின் நியதி;. அதற்கு மாறாக, நம்மிடம் இருப்பதை பகிரவில்லையென்றால், கடவுள் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை, அன்பு போலியானது.
 1 யோவான் 3: 17 அழகாக நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது, “உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லையென்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எவ்வாறு நிலைத்திருக்கும்?” தேவையில் இருக்கக் கூடிய மனிதனின் வாழ்வை சீர்செய்தல்தான் உண்மையான அன்பின் நெறியாகும். பிறருக்காக வாழக்கூடிய மனிதர்கள், தங்கள் வாழ்வை ஒரு பொருட்டாக கருதமாட்டார்கள். மாறாக, பிறரின், தேவையை நிறைவுசெய்வதில் தான் தங்களுடைய வாழ்வின் பொருளை கண்டடைவர். மத்தேயு 25: 35-36 கூறுவதுபோல், “பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்: தாகமாய் இருந்தேன், என் தானத்தை தணித்தீர்கள்: அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்: நான் ஆடையின்றி இருந்தேன்,  நீங்கள் எனக்கு ஆடை அனிவித்தீர்கள்: நோயுற்றிருந்தேன், என்னை கவனித்துக் கொண்டீர்கள்: சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்” என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப இறைவனைக் பிறரிடத்தில் கண்டு கொள்வோம். அல்லது அதற்கு மாறாக, செல்வத்தை ஏழைகளோடு பகிர மனமில்லாமல் முகவாட்டத்தோடு சென்ற இளைஞனைப்போன்றோ, யாரோடும் பகிராமல், தனது களஞ்சியத்தில் அதிகாக சேமித்து வைத்து இறந்துபோன முட்டாள் செல்வந்தனைப் போன்றோ அல்லது ஏழை இலாசருக்கு மனமிரங்கமால், பகிராமல் வாழ்ந்த செல்வந்தனைப் போன்று வாழ்கிறோமா? சிந்தித்துப் பார்ப்போம். பகிர்ந்து வாழ்வோம் ஏனெனில் அன்பின் உ லகம் பெரியது.     

- அருட்பணி. அமல ஞான பிரபு, மதுரை.




Comments

Popular posts from this blog

யார் பெரியவர்?

The Journey of Irom Sharmilaand Meira Paibee Movement