செல்வம் - நிலையற்றது
பிறருக்கு தீமை செய்யாமல் இருப்பது போற்றுதற்குரிய செயல். ஆனால் பிறருக்கு நன்மை செய்யாமல் இருப்பது பெருங் குற்றம். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக, கேரளாவில் கன மழையின் காரணமாக, இயற்கையின் கேரப்பிடியில் சிக்கி மக்கள், தங்களுடைய உறவுகளை, செல்வத்தை, நிலத்தை இழந்து தவிக்கிறார்கள். இந்த இழப்புகளை ஈடு செய்ய முடியாது. ஆனால் நம்முடைய நம்முடைய சின்னஞ் சிறு உதவிகளால் அவர்கள் வாழ்விற்கு நம்பிக்கை என்னும் ஒளியை ஏற்ற முடியும். மக்களின் துயரறிந்து என்னற்ற முகம் தெரியாத மனிதர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். பல மனிதர்களின் உயிரை தங்களுடைய உயிரை பணையம் வைத்து காப்பாற்றி இருக்கிறார்கள். இவர்களுடைய இந்த மனித நேய செயல்பாடு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அவர்களை நாம் மனதார வாழ்த்துவோம்.
கேன்சர் நோயினால் பாதிக்கப் பட்டிருந்த பெண்மனி ஒருவர் மருத்துவமனைக்குச் சென்று, தனது நோயை குணப்படுத்தும் படி மருத்துவரிடம் மன்றாடுகிறரார். தான் எடுத்து வந்த சாக்கு மூட்டையில் உள்ள பனத்தை மருத்துவரிடம் கொடுத்து தன்னை காப்பாற்றும் படி அழுகிறார். ஆனால் மருத்துவர் தன்னால் காப்பாற்ற இயலாது, ஏனெனில் நோய் இறுதித் தன்மையை எட்டிவிட்டது. உங்களது உயிரை காப்பாற்றுவது கடினம் என்று கைவிரிக்கிறார். அந்தப் பெண்மனி தனது நிலையை எண்ணி அழுதவாரு, தன்னிடம் உள்ள பணத்தை மருத்துமனையில் வீசி எறிந்து விட்டு, நேரத்தை, நாளை, உயிரை இந்தப் பணத்தால் பெற்றுத் தர முடியவில்லையே. இதற்காகவா இத்தனை ஆண்டுகள் இந்தப் பணத்தின் பின்னால் சென்றேன் என்று மருத்துவமனையை விட்டு வெளியேறினார். ஆம், செல்வத்தைக் கொண்டு நிலைவாழ்வை நாம் பெற்றுவிட முடியாது.
நவீனயுகத்தின் மனிதன் தனது பொருளாதார நிலையை வைத்தே தனது அடையாளத்தை முடிவு செய்பவனாகயிருக்கிறான், இன்றைய வணிகக் கலாச்சாரம் மனிதனைச் சூறாவளிக்குள் சிக்கிக் கொண்ட நெருக்கடியான மனநிலைக்கு தள்ளியிருக்கிறது, தனக்கு என்ன தேவை, எதற்காகத் தேவை, ஏன் எல்லா மதிப்பீடுகளையும் பொருளாதாரம் சார்ந்தே தீர்மானிக்கிறோம் என்பதில் இன்று பலருக்கும் குழப்பமான மனநிலையே நிலவுகிறது.
இந்த நிலை இன்றைய நற்செய்தியில் வரக்கூடிய இளைஞனுக்கும் பொருந்தும். நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று இயேசுவிடம் கேட்கிறான். இயேசு கட்டளைகளை கடைபிடி என்று அறிவுறுத்துகிறார். தான் இளைமை முதலே அதை கடைபிடித்து வருவதாக கூறுகிறான். அப்போது அவனிடம் ஒன்று குறைவு பட்டுள்ளது என்று கூறி, அவனிடம் உள்ளவற்றை பிறரோடு பகிர்ந்து கொள்ள இயேசு அழைப்பு விடுக்கிறார். ஆனால், அவன் முகம் வாடியவனாய் அங்கிருந்து செல்கிறான். ஏனெனில் தன்னிடம் உள்ள செல்வத்தை பிறரோடு பகிர்ந்து கொள்ள அவனுக்கு மனது இல்லை. இதனால் தான் இயேசு சாடுகிறார். ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது. ஆனால் இறையாட்சியில் செல்வந்தர் நுழைவது கடினம் என்று.
வரலாற்றில் வாழந்த பல மன்னர்களின் இறப்பு செல்வம் நிலையற்றவை என்று நமக்கு கற்றுத் தந்தாலும் நாம் செல்வத்தின் பின்புதான் செல்கின்றோம். தன்னுடைய Small is Beautiful (சிறியதே அழகு – தமிழாக்கம் யுசுப் ராஜா) புத்தகத்தில் “பொருட்களுக்கு முக்கியத்துவம் தரும் வாழ்க்கை முறையில் இருந்து மாறி தனது சுயதேவைகளை வரையறை செய்து கொள்வதுடன். போதுமானது என்று உணரும் மனதுடன், எளிய, உண்மையான, நீதியுணர்வுடன் உள்ள வாழ்க்கையை மனிதன் மேற்கொள்வதே எதிர்காலத்திற்கான வழி” என்கிறார் ஷுமாஸர் என்ற எழுத்தாளர்.
நாம் நம்மிடம் உள்ள செல்வத்தை பிறரோடு பகிரப் போகின்றோமா? அல்லது அந்த இளைஞனைப் போன்று செல்வம் முக்கியம் என்று கடவுளையும், மனிதர்களையும் இழக்கப் போகின்றோமா?
- அருட்பணி. அமல ஞான பிரபு, மதுரை
The essence of civilization is
not in a multiplication of wants but in the purification of characters
specifically extending our hands to the needy.
- அருட்பணி. அமல ஞான பிரபு, மதுரை
Comments