ஆண்டவரைப் பின்பற்றுவோம்
நமது அன்றாட வாழ்வை சற்று நினைவுபடுத்த விரும்புகிறேன். நாம் உடுத்தும் உடை, பயன்படுத்தும் பற்பசை, எண்ணெய். வண்டி, உணவுப் பொருள்கள், என்று ஒவ்வொன்றையும் நாம் தேர்ந்தெடுத்து பயன்படுத்துகிறோம். வாழ்க்கையும் அவ்வாறே. சில நேரங்களில் நம்முடைய மனதிற்குப் பிடித்த நபர்களுடன் நேரத்தை செலவிடும்போது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. பிடிக்காத மனிதர்களுடன் வாழ்தல் என்பது துயரைத் தரக்கூடியது. இவ்வாறு நாம் எடுக்கும் முடிவுகள் நமது வாழ்வில் மகிழ்ச்சியையும், வேதணையையும் தருகிறது. இதன் விளைவாகவே சில நேரங்களில் வாழ்வின் முக்கிய தருணங்களை முடிவு செய்வதில் குழப்பத்திற்கு உள்ளாகிறோம். ஆனால் இன்றைய வாசகங்கள் நம்மை தீர்க்கமாண, உறுதியான முடிவைத் தேர்ந்தெடுக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. எகிப்தில் பாரவோன் மன்னனுக்கு அடிமைகளாய் வாழ்ந்த மக்களை மீட்டு, தான் கொடுத்த வாக்குறுதியின் படி கானான் நாட்டிற்கு அழைத்து வருகிறார் இறைவன். இறைவன் தான் சொன்னபடி “நீங்கள் என் மக்கள் நான் உங்கள் கடவுள்” என்ற கட்டளையில் நிலைத்து இருக்கிறார். ஆனால் மக்கள் அவ்வாறு நிலைத்து நிற்கமால் அந்நிய தெய்வங்களை வழிபடுகின்றார்கள்...