தேடுங்கள் விண்மீனைக் கண்டடைவீர்கள் !
முதல் வாசகம் : எசா 60: 1-6 திபா 72: 1-2. 7-8. 10-11. 12-13 (பல்லவி: 11) இரண்டாம் வாசகம் : எபே 3: 2-3, 5-6 நற்செய்தி வாசகம் : மத்தேயு 2: 1-12 எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. அனைவருக்கும் ஆண்டவரின் திருட்காட்சிப் பெருவிழா வாழ்த்துக்கள். கிறிஸ்து பிறப்பு விழாவின் இறுதி விழாவாக இன்றைய விழாவை சிறப்பு செய்கின்றோம். கீழைத் திருஅவையில் இன்றைய நாளை கிறிஸ்து பிறப்பு விழாவாக கொண்டாடுவார்கள், ஏனெனில் புறவினத்து ஞானிகள் கிறிஸ்துவை கண்டதால் இந்நாள் அவர்களுக்கு கிறிஸ்து பிறப்பு விழா. இன்றை நாளில் ஞானிகள் வழியாக இறைவன் நமக்கு வழங்கும் நற்செய்தி : தேடுங்கள் கண்டடைவீர்கள். எழு! ஓளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் பவுலோ கொய்லோ (Paulo Coelho) எழுதிய இரசவாதம் (The Alchemist) என்ற நாவல் சந்தியாகு என்ற ஆடு மேய்க்கும் சிறுவனின் கனவு மற்றும் அவனது பயணங்கள் பற்றிய தேடல்தான் கதையின் மையக்கரு. ஸ்பெயினிலிருந்து எகிப்தில் உள்ள பிரமிடுகளில் உள்ள புதையலை கண்டுபிடிக்க பயணம் மேற்கொள்ளும் சிறுவன் புதையல் ஒன்றை கண்டறிகிறான். அந்த புதையலை கண்டறிய சிறுவன் மேற்கொள்ளும் தியாகங்கள்