எப்படிப் பேசுகிறார், பாருங்கள்!
நேர்மையும் உண்மையும் உள்ள மனிதர்களின் பேச்சு எப்பொழுதும் வல்லமை கொண்டதாக இருக்கும். ஆம் என்றால் ஆம் எனவும். இல்லை என்றால் இல்லை எனவும் உறுதிபட கூறுவதும், அதற்கேற்ப வாழ்வதும் இவர்களின் சிறப்பு. இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இயேசு. தான் கற்பித்த நற்செய்திக்கு ஏற்ப வாழ்ந்த காரணத்தினால் அவரால் தீமைகளையும், அதனை பின்பற்றும் தீயவர்களையும் இறைவாரத்தையின் அதிகாரத்தால் அகற்றினார்.
நிற்க,
நமது நாட்டில் சமூக செயற்பாட்டளர்கள், எழுத்தாளர்களுக்கு எதிராக அரங்கேறிய கைது நடவடிக்கைகள் மக்களின் பேச்சுரிமை நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதன் வெளிப்பாடு. அதில் சமீபத்தியமாக, நேற்று ஆராய்ச்சி மாணவி சோபியாவிற்கு எதிரான கைது நடவடிக்கை அரசின் பாசிசத் தன்மையை உறுதி படுத்துகிறது.
“நான் பேச மாட்டேன். நான் மெனாகவே இருப்பேன். நான் அடிமையாகவே இருப்பேன்” என்ற மனநிலையில் வாழந்ததால் தீமையின் ஆதிக்கமும், தீயவர்களின் அதிகாரமும் நம்மை ஆட்சி செய்கின்றன. விளைவு நாம் நமது உரிமைகளை, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். எனவே தீமைக்கு எதிராக, உரிமைக் குரல் எழுப்படும் பொழுது, நமது குரல்களும் ஓங்கி முழங்கட்டும் இயேசுவைப் போன்று.
“ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அவர் என்னை அனுப்பியுள்ளார்.”(லூக்கா 4:18-19) முழக்கமிட்டு அறிவித்த இயேசு அதிகாரத்தோடு தீமையையும், தீயவர்களை விரட்டினார். நாம் எப்பொழுது?
இயேசுவை பின்பற்றக்கூடிய நாமும் நற்செய்தி கற்றுத்தருகின்ற உண்மைக்கும் நீதிக்கும் ஏற்ப வாழ வேண்டும். நீதிக்கும், உண்மைக்கும் ஆபத்து ஏற்படுகின்றபோது அதை மீட்டிட நாம் துணிவு கொள்ள வேண்டும். அதுதான் இறைவன் நம்மிடம் விரும்பும் செயல்.
- அருட்பணி. அமல ஞான பிரபு, மதுரை
Comments