Posts

Showing posts from September, 2018

யார் பெரியவர்?

Image
பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு – 23, செப்டம்பர் 2018 முதல் வாசகம்: சாலமோனின் ஞான நூல் 2: 12, 17-20 இரண்டாம் வாசகம்: யாக்கோபு 3: 16-4:3 நற்செய்தி வாசகம்: மாற்கு 9: 30-37 1976ல் அமெரிக்க நாட்டின் வாஸிங்டன் நகரில், மனவளர்சி குன்றியவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிகஸ் போட்டி நடைபெற்றது. ஓட்டப் பந்தயப் போட்டியில் கலந்து கொண்டவர்களின் செயல் அனைவரின் உள்ளத்தை கவர்ந்தது. போட்டி துவங்கிய சில வினாடியில் ஒருவர் தடுமாறி கீழே விழுகழன்றார். போட்டியில் பங்கேற்ற மற்றவர்கள் தங்களுடைய ஓட்டத்தை நிறுத்தி விட்டு, கீழே விழுந்த நபரை கைகொடுத்து எழுப்பி, அனைவரும் தங்களுடைய கரங்களை ஒன்று சேர்த்து, ஒன்று சேர போட்டியின் எல்லையை கடந்தனர். இந்த நிகழ்வை குறிப்பிட்டு வெளிவந்த பத்திக்கை செய்தி ஒரு கேள்வியை முன்வைத்தது. யார் மனவளர்ச்சி குன்றியவர்கள்? அவர்களா? நாமா?  அவர்கள் இல்லை. நிச்சயமாக நாம் தான். ஏனெனில் நம்முடைய உள்ளம் தான் தீமையினால், போட்டியினால், பொறாமையினால், அதிகாரத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் தான் மனவளர்ச்சி குன்றியவர்கள்.   யார் பெரியவர்? இந்த கேள்விக்கான விடையை அறிந்தும், உண்மையை உணர

சிலுவை நம் வாழ்வின் மறுபக்கம்!

Image
இறை நம்பிக்கையாளர்கள் சரியானவற்றைத் தேர்ந்து கொள்ளவும், தேர்ந்து கொண்ட வாழ்வில் நிலைத்திருக்கவும், தேர்ந்து கொண்ட நம்பிக்கையை செயல்களில் வெளிப்படுத்தவும் இறைவன் நமக்கு அழைப்புவிடுக்கிறார்.  இன்றைய முதல் வாசகத்தில் துன்புறும் ஊழியன் பற்றி எடுத்துரைக்கிறார் இறைவாக்கினர் எசாயா. பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து பாரசீக மன்னன் சைரசு அவரால் விடுவிக்கப்பட்ட யூத மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்புகிறார்கள். அவர்களுடைய எருசலேம் நகரம் நிலைகுலைந்து கிடக்கின்றது. எனவே எருசலேம் நகரையும், கோவிலையும் சீர்செய்ய விரும்புகின்றார்கள். இந்நிலையில் ஒரு குழுவினர் கடவுளின் மீது நம்பிக்கையற்றவர்களாய் பாரசீக அரசோடு இணைந்து ஆலயத்தை கட்டுவது என்று எண்ணம் கொண்டார்கள். ஏனெனில் கடவுள் தாம் தங்களை எதிரிகளிடம் ஒப்புவித்தார் என்று கடவுளுக்கு எதிராக முனுமுனுத்தார்கள். கடவுளுக்கு எதிராக செயல்பட்டார்கள்.  மற்றவர்களே, கடவுளின் வழியை பின்பற்றி அவருக்கு உகந்தவர்களாக வாழ்வது என்று தீர்க்கமாக வாழ்ந்தார்கள். அதாவது, பாரசீகத்தையும், அதனுடைய வழிபாடுகளையும் விட்டுவிட்டு, கடவுளையும் அவரது திருச்சட்டங்களை பின்பற்ற

பேறுபெற்றவர் நம் தாய் அன்னை மரியாள்!

Image
இன்று நமக்கு மகிழ்சியான நாள். நமது பாதுகாவலியும், தாயுமான அன்னை மரியாளின் பிறப்பு விழாவை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் நாள். அன்னை மரியாளின் பரிந்துரையாள் இறைவனிடமிருந்து பெற்ற நன்மைகளுக்கு நன்றி செலுத்தும் நாள். மதங்களை கடந்து அனைத்து மக்களும் சங்கமித்து, அன்னைக்கு வேளாங்கண்ணியில் நன்றி செலுத்துவது இன்றைய நாளின் சிறப்பு.  மாசற்றவரும், எப்பொழும் கன்னியும், தூயவருமான அன்னை மரியாளின் பிறப்பு விழாவை கொண்டாடும் இந்நாளில் அவரைப் போன்று அருள் மிகப் பெற்றவராக, பேறுபெற்றவராக வாழ இறைவன் நமக்கு அன்னையின் வழியாக அழைப்பு விடுக்கிறார்.  விவிலியத்தில் 3 இடங்களில் அன்னை மரியாள் பேறுபெற்வர் என்று போற்றப்படுகிறார். முதலாவதாக, எலிசெபெத்தம்மாள் “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்” (லூக்கா 1:42) வாழ்த்துகின்றார். அதனைத் தொடர்ந்து “ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” (லூக்கா 1:45) என்று மரியாளை போற்றுகின்றார். கபிரியேல் தூதர் இறைவனின் வார்த்தையை அறிவித்த பொழுது அன்னை மரியாள் அந்த இறைவார்த்தையிலும், இறைவனிலும் நம்பிக்கை கொண்டார். எனவே, அந்த நம்பிக

எப்படிப் பேசுகிறார், பாருங்கள்!

Image
                                  நேர்மையும் உண்மையும் உள்ள மனிதர்களின் பேச்சு எப்பொழுதும் வல்லமை கொண்டதாக இருக்கும். ஆம் என்றால் ஆம் எனவும். இல்லை என்றால் இல்லை எனவும் உறுதிபட கூறுவதும், அதற்கேற்ப வாழ்வதும் இவர்களின் சிறப்பு. இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இயேசு. தான் கற்பித்த நற்செய்திக்கு ஏற்ப வாழ்ந்த காரணத்தினால் அவரால் தீமைகளையும், அதனை பின்பற்றும் தீயவர்களையும் இறைவாரத்தையின் அதிகாரத்தால் அகற்றினார்.  நிற்க,  நமது நாட்டில் சமூக செயற்பாட்டளர்கள், எழுத்தாளர்களுக்கு எதிராக அரங்கேறிய கைது நடவடிக்கைகள் மக்களின் பேச்சுரிமை நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதன் வெளிப்பாடு. அதில் சமீபத்தியமாக, நேற்று ஆராய்ச்சி மாணவி சோபியாவிற்கு எதிரான கைது நடவடிக்கை அரசின் பாசிசத் தன்மையை உறுதி படுத்துகிறது.  “நான் பேச மாட்டேன். நான் மெனாகவே இருப்பேன். நான் அடிமையாகவே இருப்பேன்” என்ற மனநிலையில் வாழந்ததால் தீமையின் ஆதிக்கமும், தீயவர்களின் அதிகாரமும் நம்மை ஆட்சி செய்கின்றன. விளைவு நாம் நமது உரிமைகளை, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். எனவே தீமைக்கு எதிராக, உரிமைக் குரல் எழுப்படும் பொழுது