எப்படிப் பேசுகிறார், பாருங்கள்!
நேர்மையும் உண்மையும் உள்ள மனிதர்களின் பேச்சு எப்பொழுதும் வல்லமை கொண்டதாக இருக்கும். ஆம் என்றால் ஆம் எனவும். இல்லை என்றால் இல்லை எனவும் உறுதிபட கூறுவதும், அதற்கேற்ப வாழ்வதும் இவர்களின் சிறப்பு. இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இயேசு. தான் கற்பித்த நற்செய்திக்கு ஏற்ப வாழ்ந்த காரணத்தினால் அவரால் தீமைகளையும், அதனை பின்பற்றும் தீயவர்களையும் இறைவாரத்தையின் அதிகாரத்தால் அகற்றினார். நிற்க, நமது நாட்டில் சமூக செயற்பாட்டளர்கள், எழுத்தாளர்களுக்கு எதிராக அரங்கேறிய கைது நடவடிக்கைகள் மக்களின் பேச்சுரிமை நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதன் வெளிப்பாடு. அதில் சமீபத்தியமாக, நேற்று ஆராய்ச்சி மாணவி சோபியாவிற்கு எதிரான கைது நடவடிக்கை அரசின் பாசிசத் தன்மையை உறுதி படுத்துகிறது. “நான் பேச மாட்டேன். நான் மெனாகவே இருப்பேன். நான் அடிமையாகவே இருப்பேன்” என்ற மனநிலையில் வாழந்ததால் தீமையின் ஆதிக்கமும், தீயவர்களின் அதிகாரமும் நம்மை ஆட்சி செய்கின்றன. விளைவு நாம் நமத...


Comments