Posts

Showing posts from November, 2018

உயர்ந்த காணிக்கை!

Image
தன்னை முழுமையாக வழங்குதலே உயர்ந்த காணிக்கை. ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு 1 அரசர்கள் 17:10-16   எபிரேயர் 9:24-28   மாற்கு 12:38-44 இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகளும், செபங்களும்.  இன்றைய இறைவாக்குப் பகுதிகள் இரண்டு கைம்பெண்கள் பற்றி கூறுகிறது. ஒருவர் சாரிபாத் நகரைச் சார்ந்த கைம்பெண். தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். மற்றொருவர், இன்றைய நற்செய்தியில் வருகின்ற கைம்பெண். இருவரும் வாழ்வில் அனைத்தையும் இழந்தவர்கள். இருவரையும் தங்களது காலத்தில் வாழ்ந்த சிறந்தவர்களால் வாழ்த்தப்படுகிறார்கள், அவர்கள் வாழ்க்கை பிறருக்கு எடுத்துக்காட்டாக மாறுகிறது. ஏனெனில், அவர்கள் பகிர்தலில், வழங்;குதலில் உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள்.  இன்றைய முதல் வாசகத்தின் வரலாற்றுப் பின்னனியைப் பார்க்கின்றபோது, மக்கள் பஞ்சத்தால் துயரப்படுகிறார்கள். எதற்காகப் பஞ்சம்? இஸ்ரேயலை ஆட்சி செய்த ஆகாபு காலத்தில் யாவே கடவுளை வழிபடாமல் வேற்றுத் தெய்வங்களை வழிபடுகிறார்கள். மக்களை முறைப் படுத்த வேண்டிய அரசனும் மக்களோடு இணைந்து பல தெய்வ வழிபாட்டில் ஈடுபடுகின்றான். மக்களின்...